- Advertisement -
Homeசினிமாமிகப்பெரிய கார் விபத்தில் சிக்கிய ரக்‌ஷிதா. இப்போது எப்படி உள்ளார் - முழு விவரம்.

மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கிய ரக்‌ஷிதா. இப்போது எப்படி உள்ளார் – முழு விவரம்.

- Advertisement-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்தவர் பாடகி ரக்ஷிதா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பல்வேறு திரைப்படங்களுக்கும் பாடல்களை பாடி உள்ளார். குறிப்பாக ஏ ஆர் ரகுமான் இசையிலும் அவர் சில பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில் இன்று ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின் வருமாறு, நான் இன்று மலேசியாவில் ஏர்போர்ட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கையில் மிகவும் கடுமையான ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது.

நான் சென்ற கார் டிவைடரில் மோதியதால் அந்த விபத்து ஏற்பட்டது. நல்ல வேலையாக ஏர்பேக் சரியான நேரத்தில் செயல்பட்டதால் என் உயிர் தப்பியது. என் உடன் இருந்தவர்கள் மற்றும் டிரைவரின் உயிரும் தப்பியது. நான் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன். நல்ல வேலையாக முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்கு பெரிய சேதம் எதுவும் இல்லை.

முன் இருக்கையில் அமர்ந்திருந்தடர்களுக்கு சிறிய அளவில் உள் மற்றும் வெளி காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்தின் போது பத்து நொடிகளில் என் முழு வாழ்க்கையும் என் கண் முன் வந்து சென்றது. இதற்காக அந்த காரில் இருந்த ஏர் பேக்குக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ஏர்போர்ட் மட்டுமில்லை என்றால் நிலைமை கடுமையாக இருந்திருக்கும்.

- Advertisement-

இப்பொழுது கூட அதை நினைத்தால் என் மனம் பதுருகிறது. இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனம் உருக அந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளார்

சற்று முன்