பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ரசிகைக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா! இணையத்தில் வைரலாகும் இரங்கல் கடிதம்…

- Advertisement -

அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா என்ற இளம்பெண் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு அவரது புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார் சூர்யா.

சூர்யா எப்போதும் தனது ரசிகர்கள் மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருப்பவர். தனது அறக்கட்டளையின் மூலம் பல ஏழை மாணவர்களை படிக்க வைக்கும் சூர்யா, தனது ரசிகர்களுக்கு எப்போதும் நல் அறிவுரைகளையே கூறி வருவார். இவ்வாறு தனது ரசிகர்களின் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறை உடையவர் சூர்யா.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். அந்த துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட 8 பேர் பலியானார்கள். அதில் ஹைதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண்ணும் உயிரிழந்தார். இவர் சூர்யாவின் மிக தீவிர ரசிகையாக இருந்தவர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் இறப்பிற்கு அவரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியவாறு ஒரு புகைப்படத்தை சூர்யா வெளியிட்டுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் குடும்பத்திற்கு ஒரு இரங்கல் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில், “உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன். இந்த இழப்பு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும். ஒரு சக மனிதனாகவும் தந்தையாகவும் உங்களது துயரத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

- Advertisement -

அன்புள்ள ஐஸ்வர்யாவுக்கு, நீங்கள் என் மீது வைத்திருந்த பாசம் என்றென்றும் என் நினைவில் இருக்கும். என்னை ஒரு பகுதியாக வைத்திருந்த நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்றிருக்க வேண்டியதில்லை” என்று அந்த கடிதத்தில் சூர்யா மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். சூர்யா தனது ரசிகையின் குடும்பத்திற்காக எழுதியுள்ள இரங்கல் கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

சற்று முன்