- Advertisement 3-
Homeசினிமாதமிழ் புத்தாண்டில் மோத தயாராகும் தல-தளபதி? விஜய் 68 VS விடாமுயற்சி? தரமான சம்பவமா இருக்கப்போகுது!

தமிழ் புத்தாண்டில் மோத தயாராகும் தல-தளபதி? விஜய் 68 VS விடாமுயற்சி? தரமான சம்பவமா இருக்கப்போகுது!

- Advertisement-

விஜய்யின் “லியோ” திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை குறித்த பேச்சுக்கள் வலம் வரத்தொடங்கிவிட்டன. “தளபதி 68” திரைப்படத்தை அட்லி இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அட்லி தற்போது பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தின் பணிகளே இன்னும் முடிவடையவில்லை. ஆதலால் அட்லி “தளபதி 68” திரைப்படத்தை இயக்க வாய்ப்பில்லை என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனி விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. கோபிசந்த் இதற்கு முன்பு தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து “வீர சிம்ஹா ரெட்டி” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் கோபிசந்த் மல்லினேனி போன்ற தெலுங்கு இயக்குனர் விஜய்க்கு ஒத்துவரமாட்டார் என அவரது ரசிகர்களிடையே பேச்சுக்கள் அடிபட்டன. இதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு, “தளபதி 68” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகின்றது. இது குறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை.

- Advertisements -

அதே போல் அஜித்குமார், “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் விஜய்யின் 68 ஆவது திரைப்படமும் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படமும் ஒரே நாளில் மோதவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement-

இதற்கு முன் சமீபத்தில் பொங்கல் பண்டிகையன்று விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் மோதியது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் ஆரவாரமாக அத்திரைப்படங்களை கண்டுகழித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் இருவரும் போட்டிபோட தயாராகிவிட்டனராம்.

சற்று முன்