வதந்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? தளபதி 68 படத்தில் விஜய்யின் சம்பளத்தை குறித்து வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்?

- Advertisement -

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இப்போது எங்கு திரும்பினாலும் “தளபதி 68” திரைப்படத்தை குறித்த பேச்சுக்களே வலம் வருகிறது

“தளபதி 68” திரைப்படத்தை முதலில் அட்லீ இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கோபிசந்த மல்லினேனியின் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது வெங்கட் பிரபுவின் பெயர் அடிபடுகிறது. எனினும் “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது ஓரளவு உண்மைக்கு மிக நெருக்கமான தகவல் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போல் “தளபதி 68” திரைப்படத்தை ஒருவேளை வெங்கட் பிரபு இயக்குவது உறுதியாக இருந்தால் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இதற்கு முன் விஜய் நடித்த “புதிய கீதை” திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன் பின் அவர் விஜய் திரைப்படங்களுக்கு இசையமைக்கவே இல்லை. இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படத்தின் மூலம் விஜய்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணையும் எதிர்பார்க்கப்பட்டாலும் அனிருத் இசையமைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு “தளபதி 68” திரைப்படத்தை குறித்து பல தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இணையம் முழுக்க ஒரு தகவல் பரவி வந்தது. அதனை பார்த்து பலரும் அதிர்ச்சியில் முழ்கினர். அதாவது “தளபதி 68” திரைப்படத்திற்கு விஜய் 200 கோடிகள் சம்பளம் நிர்ணயம் செய்துள்ளார் என்று ஒரு செய்தி பரவியது. இந்த செய்தியை பாரத்து பல தயாரிப்பாளர்கள் கூட அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.

- Advertisement -

விஜய் சமீப காலமாக ரூ.125 கோடிகள் சம்பளமாக பெற்றுக்கொண்டு வருகிறார் என கூறப்படுவது உண்டு. அதே போல் “தளபதி 68” திரைப்படத்தில் தனது சம்பளத்தில் 25 கோடிகளை ஏற்றி ரூ.150 கோடிகள் சம்பளமாக பெறவுள்ளதாக ஒரு தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்