- Advertisement 3-
Homeசினிமாவெளிநாட்டில் பிரம்மாண்டமான “தளபதி 68” கட் அவுட், சிறப்பான செய்கையை செய்த விஜய் ரசிகர்கள், எந்த...

வெளிநாட்டில் பிரம்மாண்டமான “தளபதி 68” கட் அவுட், சிறப்பான செய்கையை செய்த விஜய் ரசிகர்கள், எந்த நாட்டில் தெரியுமா?

- Advertisement-

தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில், ரசிகர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொன்டது. “தளபதி 68” படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என்ற செய்தி பல நாட்களாகவே இணையத்தில் பரவி வந்த நிலையில் இத்தகவல் வழக்கம் போல் வதந்தியாகவே இருக்கும் என்று சிலர் கூறி வந்தனர்.

ஆனால் பல சினிமா பத்திரிக்கையாளர்கள் தங்களின் பேட்டிகளில், “தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவது உறுதிதான்” என கூறி வந்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

- Advertisements -

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது போல், இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக அறிவிப்பும் வந்தது. யுவன் இதற்கு முன் விஜய் நடித்த “புதிய கீதை” திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு “தளபதி 68” திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் கூடுதலான அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு “தளபதி 68” குறித்த பேச்சுக்கள் இணையத்தில் சூடு பிடித்து வரும் நிலையில் மலேசிய நாட்டில் விஜய் ரசிகர்கள் “தளபதி 68” திரைப்படத்திற்காக வெளியிட்ட போஸ்டரை மிகப் பிரம்மாண்டமான கட் அவுட்டாக உருவாக்கி தமிழ்நாட்டு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

- Advertisement-

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், தற்போது “தளபதி 68” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் மூழ்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்