- Advertisement -
Homeசினிமாதளபதி 68 படத்தின் ஹீரோயின் இவரா? ஆனால் அதில் ஒரு சட்ட சிக்கல் இருக்கு? என்னவா...

தளபதி 68 படத்தின் ஹீரோயின் இவரா? ஆனால் அதில் ஒரு சட்ட சிக்கல் இருக்கு? என்னவா இருக்கும்!

- Advertisement-

விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக வெளிவரும் தகவல் ஓரளவு உண்மைக்கு நெருக்கமான தகவலாகவே இருப்பதாக பல பத்திரிக்கையாளர்கள் தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர். முதலில் அட்லீ இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், அவர் பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஆதலால் அட்லீ இயக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனியின் பெயர் அடிப்பட்டது. ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கப்போகும் தகவல்தான் 80% உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது. விஜய் நடிக்கும் 68 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படமும் “தளபதி 68” திரைப்படமும் ஒரே நாளில் வெளிவர திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படத்தின் கதாநாயகி குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும் அவர் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் அவரது கால்ஷீட் நாட்களை பொறுத்து அவர் சிந்தித்து முடிவெடுப்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய்-நயன்தாரா ஜோடி இதற்கு முன் “வில்லு”, “பிகில்” ஆகிய திரைப்படங்களில் கலக்கியிருந்தார்கள். இருவரும் ஸ்டார் ஜோடிகளாக பார்க்கப்படுகின்றனர். இத்திரைப்படங்களை தொடர்ந்து நயன்தாரா மீண்டும் “தளபதி 68” திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புவதாக தெரியவருகிறது.

- Advertisement-

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருவது ஊரறிந்த செய்தியே. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக ஒரு செய்தி கூறப்படுகிறது.

சற்று முன்