இயக்குனர் பா.ரஞ்சித் எப்போதும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்தே தனது திரைப்படங்களை உருவாக்ககூடியவர். “அட்டக்கத்தி” தவிர, “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா”, “சார்பட்டா பரம்பரை” போன்ற திரைப்படங்களில் அதிகார அரசியலை சாடியவாரே அத்திரைப்படங்களின் மைகயக்கரு அமைந்திருக்கும். அதே போல் பா.ரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் காதலுக்கு பாலினம் பேதம் இல்லை என்ற கருத்தியலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும் இத்திரைப்படத்திற்கு பல கடுமையான விமர்சனங்கள் வந்தன.
“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்று ஒரு செய்தி வெளிவந்தது. மேலும் அத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கே.ஜி.எஃப் பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அத்திரைப்படத்திற்கு “தங்கலான்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
“தங்கலான்” திரைப்படதில் விக்ரமின் கெட்டப் மிகவும் அபாரமாக இருந்தது. சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாளின் போது இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. அதில் படக்குழுவினரின் பிரம்மாண்ட உழைப்பு பார்வையாளர்களை அசரவைத்தது. இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது “தங்கலான்” திரைப்படத்தை குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தங்கலான்” திரைப்படத்தை ஆஸ்கர் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதாம். திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே படக்குழு இவ்வாறு திட்டமிட்டுள்ளது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இத்தகவல் இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 95 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழாவில் இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு திரைப்படமான “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்திற்கும் தமிழ் ஆவண குறும்படமான “தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ்” என்ற திரைப்படத்திற்கும் ஆஸ்கர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.