தங்கலான் படத்தின் தாறுமாறான அப்டேட்டை வெளியிட்ட மாளவிகா மோகனன்! என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?

- Advertisement -

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இத்திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேஜிஎஃப் பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படமாகி வருவதாக கூறப்படுகிறது.

“தங்கலான்” திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

சமுதாயத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை சாடும் வகையில் திரைப்படங்களை இயக்கும் வல்லமை படைத்தவராக திகழ்கிறார் பா.ரஞ்சித். “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா”, “சார்பட்டா பரம்பரை” என இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களின் மையக்கருத்து என்பது சமூக நீதி என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவானதே ஆகும். இவ்வாறு பல சமூக கருத்துக்களை தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் பா.ரஞ்சித்.

இதனை தொடர்ந்துதான் தற்போது “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். “தங்கலான்” என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தமும் கூறப்படுகிறது. அதாவது கேஜிஎஃப் பகுதிகளில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு பிரிவின் பெயர்தான் தங்கலான் என கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தனது டிவிட்டர் பக்கத்தில் இத்திரைப்படத்தை குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் சண்முகா என்ற ரசிகர் ஒருவர், “தங்கலான் படப்பிடிப்பு எப்படி போகிறது?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா மோகன், “தங்கலான் மிக அற்புதமாக உருவாகி வருகிறது.

ஒரு தனித்துவமான உலகை நாங்கள் படைத்து வருகிறோம். இந்த மாதம் எங்களது கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் விக்ரமிற்கு அடிபட்டு காயம் ஏற்பட்டதால் அவர் குணமான பின் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்