- Advertisement -
Homeசினிமாசர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான "தி கேரளா ஸ்டோரி" படத்துக்கு இவ்வளவு கோடி வசூலா?

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” படத்துக்கு இவ்வளவு கோடி வசூலா?

- Advertisement-

“வெந்து தணிந்தது காடு” புகழ் சித்தி இத்னானி, அடா ஷர்மா ஆகியோரின் நடிப்பில் சுதிப்டோ சென் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இத்திரைப்படம் இஸ்லாமிய சமூகத்தை பயங்கரவாதிகள் போல காட்சிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நேற்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் ஒரு ஹிந்தி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கவேண்டும் என குரல்கள் எழுந்தன. எனினும் இத்திரைப்படம் இந்த இரண்டு மாநிலங்களிலும் நேற்று வெளிவந்தது. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் வெளிவரும் திரையரங்குகளில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால், கேரளாவில் ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவிகளில் நான்கு மாணவிகள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள்.

மேலும் ஹாஸ்டலில் ஒரே அறையிலும் தங்கியிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவி முஸ்லீம். அந்த முஸ்லீம் மாணவி ஐ எஸ் பயங்கரவாதிகளோடு தொடர்புடையவர் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெண் மற்ற மூவரையும் மதமாற்றி ஐ எஸ் பயங்கரவாதிகளின் அமைப்புக்குள் சேர வைத்துவிடுகிறார். இதுதான் கதை.

- Advertisement-

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் இந்தியா முழுவதிலும் ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.8 கோடிகள் வசூல் ஆகி உள்ளன. எனினும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இத்திரைப்படம் ஒரு கோடி கூட வசூல் ஆகவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அடுத்த வாரமே இத்திரைப்படம் தமிழக திரையரங்குகளில் இருந்து தூக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏஜிஎஸ் சினிமா தனது திரையரங்குகளில் இருந்து இத்திரைப்படத்தை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை சன்சைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விதுல் அம்ரித்லால் ஷா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் 8 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சற்று முன்