லியோ படப்பிடிப்பில் த்ரிஷாவுக்கு திடீரென அதிர்ச்சியை கொடுத்த படக்குழுவினர்… என்ன நடந்தது தெரியுமா?

- Advertisement -

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் தொடங்கியது. அங்கே கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட ரூ.300 கோடி செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்திருந்த நிலையில் “லியோ” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே போல் விஜய் இதற்கு முன்பு நடித்த “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் “லியோ” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா, சமீபத்தில் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது “லியோ” படக்குழுவினர் த்ரிஷாவுக்கு ஒரு சர்ப்ரைஸை அளித்துள்ளனர். அதாவது த்ரிஷாவின் பிறந்தநாளை ஒட்டி “லியோ” படக்குழுவினரால் அவருக்கு கேக் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கேக்கை வெட்டி “லியோ” பட குழுவினருடன் அவர் தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

- Advertisement -

அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா. அதில் “லியோ படக்குழுவினருக்கு நன்றி” என மிகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” இரண்டாம் பாகத்தில் குந்தவையாக த்ரிஷா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். தற்போது த்ரிஷா, “தி ரோடு” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்