- Advertisement -
Homeசினிமாவடிவேலு குரல், ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்! மாமன்னன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ அப்டேட்!!

வடிவேலு குரல், ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்! மாமன்னன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ அப்டேட்!!

- Advertisement-

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இந்த இரண்டு திரைப்படங்களும் சாதிய ஏற்றத்தாழ்வை மிக கடுமையாக சாடியது. ஆதலால் இத்திரைப்படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தாலும் சார்ந்தோர் சிலர் இத்திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். குறிப்பாக “கர்ணன்” திரைப்படத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்தது.

“கர்ணன்” திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக ஒரு தகவல் வெளிவந்தது. மேலும் அதில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் “மாமன்னன்” என்ற டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மாரி செல்வராஜ்-ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ முதன்முதலாக இணைந்துள்ளதால் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்காக வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் இப்பாடலை சிங்கிளாக விரைவில் வெளியிடுமாறு கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “இசைப்புயலின் இசையில், வைகைப்புயலின் குரலில், அண்ணன் யுகபாரதி வரிகளில் மாமன்னன் முதல் பாடல் 19.5.2023 முதல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement-

அதாவது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு “மாமன்னன்” திரைப்படத்திற்காக பாடிய பாடல் வருகிற 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

“மாமன்னன்” திரைப்படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் கதாப்பாத்திரலேயே வடிவேலு நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வடிவேலு ஒரு அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் வருகிறார் என சமீபத்தில் வெளிவந்த எக்ஸ்க்லூசிவ் புகைப்படங்களின் மூலம் அறியமுடிகிறது.

 

சற்று முன்