சிவகார்த்திகேயனால் வெங்கட் பிரபுவுக்கு அடித்த லக்? தளபதி 68 வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்? வெளியான ஆச்சரிய தகவல்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், இப்பொழுது கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

“மாவீரன்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கிடையில் கடந்த 5 வருடங்களாக உருவாகி வந்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளது.

- Advertisement -

“அயலான்” திரைப்படம் ஒரு ஏலியனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது. ஆனால் இத்திரைப்படத்தில் அதிகப்படியான கிராபிக்ஸ் பணிகள் பாக்கி இருந்ததால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. எனினும் ஒரு வழியாக வருகிற தீபாவளி அன்று இத்திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க,  “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் செய்த ஒரு காரியத்தினால்தான் “தளபதி 68” திரைப்படத்தின் புராஜெக்ட் வெங்கட் பிரபுவின் கைக்கு சென்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

“மாநாடு” திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தபோது ஏஜிஎஸ் நிறுவனம் வெங்கட் பிரபுவிடம், தன்னுடைய நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கித் தருமாறு ஒப்பந்தம் செய்துவைத்திருந்தனராம். அத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் எனவும் முடிவு செய்து சிவகார்த்திகேயனை அணுகி அவருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அட்வான்ஸாகவும் கொடுத்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படமாக அது உருவாக இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் அப்போது வெவ்வேறு திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்ததால் அவரால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லையாம். இதற்கிடையில் வெங்கட் பிரபு, “மன்மத லீலை”, “கஸ்டடி” என இரண்டு திரைப்படங்களை இயக்கிவிட்டார்.

ஆனால் சிவகார்த்திகேயனோ இன்னும் ஒன்றரை வருடங்கள் காத்திருக்கும்படி ஏஜிஎஸ் நிறுவனத்தாரிடம் கூறிவிட்டாராம். சிவகார்த்திகேயன் வரும்வரை வெங்கட் பிரபுவை காத்திருக்க வைக்க முடியாது என நினைத்த ஏஜிஎஸ் நிறுவனம், விஜய்க்கு கதை பண்ண முடியுமா? என வெங்கட் பிரபுவிடம் கேட்டனராம். வெங்கட் பிரபுவும் கதையை தயார் செய்து சமீபத்தில்தான் விஜய்க்கு கதை கூறினாராம். இவ்வாறுதான் “தளபதி 68” புராஜெக்ட் வெங்கட் பிரபுவின் கைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்