டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு – தில்ராஜூ மாதிரியே பேசி ஆந்திரா ஆடியன்ஸை உற்சாகப்படுத்திய வெங்கட் பிரபு… வைரல் வீடியோ

- Advertisement -

விஜய் நடிப்பில் வெளிவந்த “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு. ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு” என்று மிகவும் கலகலப்பாக பேசினார். அவர் பேசியது அந்த சமயத்தில் வைரலாக பரவியது. இணையவாசிகள் பலரும் அவர் பேசியதை மீம் டெம்ப்ளேட்டாக பயன்படுத்திக்கொண்டனர். மேலும் அவர் பேசியதில் பின்னணி இசை சேர்த்து ஒருவர் பாடலாகவே உருவாக்கியிருந்தார். அந்தளவுக்கு டிரெண்டிங்கில் இருந்தது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவும் இந்த வசனத்தை பேசி ஆந்திரா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வருகிற 12 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “கஸ்டடி”. இத்திரைப்படம் தெலுங்கில் உருவாகியிருக்கிறது. மேலும் தமிழில் இத்திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க கிரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அரவிந்த் சாமி, சரத்குமார், பிரியாமணி, சம்பத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஆந்திரா மாநிலத்தில் புரோமோஷன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் நாக சைதன்யா, கிரீத்தி ஷெட்டி, இயக்குனர் வெங்கட் பிரபு போன்ற பலரும் கலந்துகொண்டனர்.

- Advertisement -

அப்போது மேடையில் பேசிய வெங்கட் பிரபு, “எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது” என ஆங்கிலத்தில் பேசினார். அப்போது ரசிகர்கள் அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். அதன் பின் திடீரென தெலுங்கில் பேசத்தொடங்கிய வெங்கட் பிரபு, தில் ராஜு பாணியில், “ஈ பிலிம்லோ ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உண்தி, ஆக்சன் வேணுமா ஆக்சன் உண்தி, பெர்ஃபார்மன்ஸ் வேணுமா பெர்ஃபார்மன்ஸ் உண்தி, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா ஃபேமிலி சென்ட்மென்ட் உண்தி” என்று கூறியதும் அமைதியாக இருந்த ரசிகர்கள் உற்சாகமாக கத்தத் தொடங்கினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சமீப காலமாக தெலுங்கு இயக்குனர்கள் பலரும் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். விஜய்யின் “வாரிசு”, சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”, தனுஷின் “வாத்தி” ஆகிய திரைப்படங்கள் தெலுங்கு இயக்குனர்களால் உருவானவை.

இந்த நிலையில்தான் வெங்கட் பிரபு தமிழில் இருந்து தெலுங்குக்கு சென்று படமெடுத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய பல திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருவது வழக்கம் என்றாலும் வெங்கட் பிரபு தற்போது “கஸ்டடி” திரைப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தை முதன்முதலாக இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்