- Advertisement -
Homeசினிமாதளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா?… இன்னும் யார் யாரெல்லாம் இருக்காங்களோ?

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா?… இன்னும் யார் யாரெல்லாம் இருக்காங்களோ?

- Advertisement-

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதே விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதன் பின் அத்திரைப்படத்தை அட்லி இயக்கவில்லை எனவும் கோபிசந்த் மல்லினேனிதான் இயக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது.

கோபிசந்த் மல்லினேனி தெலுங்கில் மாஸ் இயக்குனராக வலம் வருபவர். சமீபத்தில் அவர் தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து “வீர சிம்ஹா ரெட்டி” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்களால் நம்பமுடியாதபடி இருந்தது.

ஏற்கனவே விஜய் நடித்த “குருவி”, “வில்லு” போன்ற திரைப்படங்களில் விஜய் நம்பமுடியாத ஸ்டன்ட் காட்சிகளில் நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் அது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. மேலும் ஏற்கனவே “வாரிசு” திரைப்படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியுடன் விஜய் கைக்கோர்த்திருந்தார். ஆதலால் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரா? என்று ரசிகர்கள் கவலையில் முழ்கினர்.

- Advertisement-

இந்த நிலையில் தற்போது இதற்கு மாறாக வேறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் அட்லி, கோபிசந்த் மல்லினேனி போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபுவின் பெயர் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. எனினும் தளபதி 68 திரைப்படத்தை குறித்தான ஓரளவு அதிகாரப்பூர்வ தகவல், “லியோ” திரைப்படத்தின் வெளியீடு நெருங்கும்போதுதான் தெரியவரும். அதுவரை ரசிகர்கள் பொறுமை காப்பது தவிர வேறு வழியில்லை என்பதுதான் நிதர்சனம்.

 

சற்று முன்