Homeசினிமாஇரட்டை வேடத்தில் விஜய்? லியோ குறித்து இணையத்தில் லீக் ஆன செம தகவல்…

இரட்டை வேடத்தில் விஜய்? லியோ குறித்து இணையத்தில் லீக் ஆன செம தகவல்…

-Advertisement-

விஜய் நடித்துவரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இத்திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் தற்போது “லியோ” திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

-Advertisement-

“லியோ” திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. சமீபத்தில் அர்ஜூனின் கதாப்பாத்திரம் குறித்து ஒரு தகவல் வெளிவந்தது.

அதாவது “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தில் எட் ஹாரிஸ் ஏற்று நடித்த கார்ல் ஃபகோர்டி என்ற கதாப்பாத்திரத்தில்தான் “லியோ” படத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

-Advertisement-

இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படம் குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் விஜய் லியோ, பார்த்திபன் என  இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம். அதாவது பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் எப்படி மும்பையில் பாட்ஷாவாகவும் சென்னையில் மாணிக்கமாகவும் இருப்பாரோ அதே போல், “லியோ” திரைப்படத்தில் லியோ, பார்த்திபன் என இரு வேறு பெயர்களில் நடிக்கிறாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்கள். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

-Advertisement-

சற்று முன்