பிச்சைக்காரன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தை முதல் முறையாக விவரித்த விஜய் ஆண்டனி

- Advertisement -

பிச்சைக்காரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட படம் தான் பிச்சைக்காரன் 2. இந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு நடுக்கடலில் விபத்து ஏற்பட்டு அவர் பல நாட்கள் மருத்துவ மனையில் இருந்த செய்தி நாம் அறிந்ததே. அந்த சமயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விஜய் ஆண்டனியே தற்போது விரிவாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: பொதுவாக ஆக்ஷன் காட்சிகளில் பலருக்கும் அடிபடுவது வழக்கம். ஆனால் காதல் காட்சியில் எனக்கு அடிபட்டு முகம் எல்லாம் உடைந்தது. என்ன ஆனது என்றால் ஒரு காதல் பாடலை படமாக்குகையில், கடலில் ஹீரோஇன் ஒரு போட்டில் செல்வார், நான் அவருக்கு நெருக்கமாக ஒரு வாட்டர் பைக்கில் செல்ல செல்லவேண்டும்.

- Advertisement -

முதல் ரௌண்டில் நான் சரியாக கடந்து சென்றேன், ஆனால் இரண்டாவது ரௌண்டில் இன்னும் நன்றாக நெருக்கமாக செல்ல நான் முயற்சித்தபோது வண்டி, ஹீரோஇன் சென்ற போட்டில் மோதி, எனக்கு முகமெல்லாம் அடிபட்டது. நான் மயங்கி அப்படியே நீரில் முழ்கிவிட்டேன். பிறகு ஹீரோஇன்னும் வேறு சிலரும் சேர்ந்து தான் என்னை காப்பாற்றினார்கள்.

எனக்கு அப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சற்று உயரமான அலை வந்ததால் நான் வண்டியை போட்டில் மோதி இருப்பேன் என்று நினைக்கிறேன். அதிக தண்ணீர் வேறு குடித்திருப்பேன் போல, அதனால் உள்ளுறுப்புகளில் வேறு பாதிப்பு ஏற்பட்டது என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் பேசுகையில், இந்த திரைப்படம் சரியாக இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் பூஜியம் நொடிகளில் சென்சார் ஆகி உள்ளது. அதே போல படம் சிறப்பாக வந்துள்ளது. ஆனால் அதற்க்கு நான் காரணம் அல்ல. இந்த படத்தில் வேலை செய்த அனைவரும் தான் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்