விஜய்யின் மார்க்கெட் வேல்யூ குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கேரளா, ஆந்திரா போன்ற தென்னிந்திய பகுதிகளில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆதலால் விஜய்யின் திரைப்படங்கள் அதிகளவில் விலைக்கு போவது உண்டு.
அந்தளவுக்கு விஜய் தென்னிந்தியாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார். விஜய் தொடக்கத்தில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தபோது கூட இந்தளவு மார்க்கெட் இல்லை. ஆனால் விஜய் மாஸ் ஹீரோவாக உருவான பிறகு தமிழ்நாட்டை தாண்டியும் அவரது திரைப்படங்கள் ரசிக்கப்பட்டது.
விஜய் “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்றாலும் ஓரளவு உண்மையான தகவல் என்றே பல சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடித்திருந்த “புதிய கீதை” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு விஜய்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமையவே இல்லை. ஆதலால் விஜய்-வெங்கட் பிரபு-யுவன் ஷங்கர் ராஜாவின் கூட்டணிக்காக விஜய் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் சமீப காலமாக ரூ.125 கோடிகள் சம்பளமாக பெற்று வருகிறார். ஆனால் “தளபதி 68” திரைப்படத்தில் விஜய் ரூ.150 கோடிகளாக தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய்தான் இருப்பார் என சிலர் கூறிவருகின்றனர்.