“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது எங்குத் திரும்பினாலும் “தளபதி 68” படம் குறித்த பேச்சுக்களே எழுகின்றன. “வாரிசு” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு எப்படி “தளபதி 67” படத்தை குறித்த பேச்சுக்கள் தீவிரமாக வலம் வந்ததோ அதே போல் தற்போது “தளபதி 68” திரைப்படம் குறித்து பேச்சுக்கள் அடிபடுகின்றன.
“தளபதி 68” திரைப்படத்தின் பேச்சுக்கள் தொடங்கியபோது முதலில் இயக்குனர் அட்லீதான் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அட்லீ பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தின் பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில் அவர் “தளபதி 68’ திரைப்படத்தை இயக்க வாய்ப்பில்லை என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்குவதாக தகவல் வந்தது. இந்த தகவல் ரசிகர்களை ஓரளவு சோகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஏற்கனவே “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி என்னும் தெலுங்கு இயக்குனர்தான் இயக்கினார். அந்த சமயத்திலேயே பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைவதில் ரசிகர்களுக்கு விருப்பம் இல்லை என தெரியவந்தது.
மேலும் கோபிசந்த் மல்லினேனி சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து “வீர சிம்ஹா ரெட்டி” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் தமிழ் ரசிகர்களால் நம்பமுடியாதபடியான சண்டை காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது போன்ற சண்டைக்காட்சிகளில் விஜய் நடித்தால் கேலிக்குள்ளாக்கப்படுவார் என ரசிகர்கள் பயந்தனர்.
எனினும் அதன் பின் கோபிசந்த் மல்லினேனியின் பெயர் காணாமல் போய், இப்போது வெங்கட் பிரபுவின் பெயர் வலம் வந்துகொண்டிருக்கிறது. “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவது ஓரளவு உறுதியான தகவல்தான் என்று பல சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று விஜய் கண்டிஷன் போட்டிருக்கிறாராம். இதனால் வெங்கட் பிரபு அதிர்ச்சியடைந்துள்ளாராம். எனினும் விஜய், தான் சொன்ன கதையில் நடிப்பதாக ஒப்புக்கொண்டதே மகிழ்ச்சி என்று வெங்கட் பிரபு குஷியாக இருக்கிறாராம்.