- Advertisement -
Homeசினிமாசிம்பு நடித்த மாஸ் ஹிட் படத்தை தவறவிட்ட விஜய், என்ன படம்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க…

சிம்பு நடித்த மாஸ் ஹிட் படத்தை தவறவிட்ட விஜய், என்ன படம்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க…

- Advertisement-

சிம்பு தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் ஈடுபாடு குறைந்தவராக காணப்பட்டார். பல தனிப்பட்ட விஷயங்கள் அவரை விரக்திக்குள் தள்ள அதில் இருந்து மீண்டு வர சிரமபட்டார். அந்த சமயத்தில் சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தது. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு வரமாட்டிக்கிறார் எனவும் டப்பிங் கூட பேசமாட்டிக்கிறார் எனவும் பல தயாரிப்பாளர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் சிம்புவின் கெரியரே முடிந்துவிட்டது என்று கூட பத்திரிக்கைகள் எழுத தொடங்கிவிட்டன. இந்த நிலையில்தான் சிம்பு “மாநாடு” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதற்கு முன்பே அவர் “ஈஸ்வரன்” திரைப்படத்தில் நடித்திருந்தாலும் “மாநாடு” ஒரு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது.

இத்திரைப்படத்தை ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருந்தார் இத்திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. இத்திரைப்படம் ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் பயங்கர ஹிட் அடித்தது. இந்த நிலையில் “மாநாடு” திரைப்படம் குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது 7 வருடங்களுக்கு முன்பு “மாநாடு” திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு. ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்க மறுத்திருக்கிறார். அதன் பின்தான் இந்த கதை சிம்புவிடம் சென்றிருக்கிறது. மேலும் முதலில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜூனை அணுகினார்களாம்.

- Advertisement-

ஆனால் கால்ஷீட் கொடுக்கமுடியாத காரணத்தால் இத்திரைப்படத்தில் அர்ஜூன் நடிக்க முடியவில்லையாம். அதன் பின் அரவிந்த்சாமியை வில்லனாக நடிக்க வைக்கலாம் என அவரை சென்று பார்த்துள்ளனர். ஆனால் அப்போது அரவிந்த்சாமி “தலைவி” திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

ஆதலால் அவராலும் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க முடியாமல் போனபோதுதான் எஸ்.ஜே.சூர்யா இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.  எனினும் வெங்கட்பிரபு, “விட்டதை பிடிக்கனும்” என்பது போல் தற்போது “தளபதி 68” திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்