சுந்தர் சி தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகின்றார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் “முறை மாமன்”. தனது முதல் திரைப்படத்திலேயே மாஸ் ஆன வெற்றியை கொடுத்தார் சுந்தர் சி. அதனை தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களை இயக்கிய சுந்தர் சி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வளர்ந்தார்.
சுந்தர் சி திரைப்படங்களில் எப்போதும் காமெடி மற்றும் சென்டிமென்டுகள் கலந்தே இருக்கும். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, “உனக்காக எல்லாம் உனக்காக”, “வின்னர்”, “கிரி”, “கலகலப்பு” போன்ற பல திரைப்படங்கள் காமெடி கலந்த சென்டிமென்ட் திரைப்படங்களாகவே அமைந்தது.
சுந்தர் சி சமீபத்தில் “காஃபி வித் காதல்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது “அரண்மனை 4” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி ஒரு முறை விஜய்க்கு ஒரு கதை கூறியிருக்கிறார். ஆனால் அந்த கதையில் விஷால் நடித்து படு ஃப்ளாப் ஆகியிருக்கிறது. அது என்ன திரைப்படம்? விஜய் ஏன் சுந்தர் சி-ன் கதையை ஒப்புக்கொள்ளவில்லை? என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.
சுந்தர் சி சிம்புவை வைத்து “வந்தா ராஜாவாதான் வருவேன்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யை சந்தித்து ஒரு பக்கா சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு கதையை கூறியிருக்கிறார். ஆனால் விஜய்யோ “ஃபர்ஸ்ட் ஹாஃப் நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியை கொஞ்சம் மாற்றமுடியுமா?” என கேட்டிருக்கிறார். ஆனால் சுந்தர் சிக்கு அதனை மாற்ற மனமில்லை. ஆதலால் விஜய் அந்த கதையில் நடிக்கவில்லை.
அதனை தொடர்ந்து அந்த கதை விஷாலிடம் சென்றது. விஷால் எந்த கேள்வியும் கேட்காமல் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அத்திரைப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது. அத்திரைப்படத்தின் பெயர் “ஆக்சன்”. இதில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.