- Advertisement -
Homeசினிமாபேன் இந்தியாலாம் வேண்டாம்ப்பா- விவாதம் செய்த விஜய், லியோ பட தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்…

பேன் இந்தியாலாம் வேண்டாம்ப்பா- விவாதம் செய்த விஜய், லியோ பட தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்…

- Advertisement-

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கும் மேல் நடைபெற்றது. அதன் பின் தற்போது சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக இதில் நடித்து வருகிறார். அதே வேலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் “லியோ” திரைப்படம் மெகா ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க விஜய்-லோகேஷ் காம்போ உழைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “லியோ” திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார், “லியோ” திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“முதலில் விஜய் சாரிடம் கதை கூறும்போது லியோ பேன் இந்தியா திரைப்படமாக இல்லை. லோகேஷின் விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து நான் விஜய் சாரிடம் சென்று, இந்த படத்தை பேன் இந்தியா படமாக பண்ணலாம் என சொல்லியபோது அவர், ‘அதெல்லாம் வேண்டாம்ப்பா, நம்ம மக்களுக்கு நம்ம படத்தை பண்ணிட்டு போவோம். நம்ம மக்கள் சந்தோஷப்படனும்’ என்று சொன்னார். அதற்கு, ‘சார் நாம அடுத்த ஸ்டேஜுக்கு போகனும்’ என நானும் லோகேஷும் சென்று சொன்னோம். அதன்படி பேன் இந்தியாவுக்காக ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் செய்தோம்” என லலித் குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement-

சற்று முன்