லியோ படத்தில் விஜய் சேதுபதி?… எல்லாத்துக்கும் அந்த இயக்குனர்தான் காரணம்- அவரே கொடுத்த விளக்கம் இதோ…

- Advertisement -

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ”. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இன்னும் 5 மாதங்கள்தான் இருப்பதால் இத்திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு “லியோ” திரைப்படத்தின் வசனக் கர்த்தாவான ரத்னகுமார், ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் ஒரு பக்கம் உடைந்து போன ஒரு மூக்கு கண்ணாடியை கையில் பிடித்தவாறு இருந்தார். அந்த மூக்கு கண்ணாடி “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த மூக்கு கண்ணாடி என்று கூறப்பட்டதால் “லியோ” திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வந்தது.

ஏற்கனவே “லியோ” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் (LCU) வருவதாகவும் கூறப்பட்டது. ஆதலால் “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருந்த சந்தனம் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி “லியோ” திரைப்படத்திலும் இடம்பெறும் என்று பேச்சுக்கள் அடிப்பட்டது. அதன் பின் ரத்னகுமார் பதிவேற்றிய அப்புகைப்படத்தால் இது குறித்த பேச்சுக்கள் சூடுபிடிக்கத்தொடங்கின.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஜய் சேதுபதி, “நான் லியோ படத்தில் நடிக்கவில்லை. இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் நம்பவேண்டாம். அந்த கண்ணாடியை ரத்னகுமார் எதற்காக பதிவிட்டிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் போடும் மனக்கணக்கிற்கு என்னால் பதில் சொல்லமுடியாது. இது போன்ற செய்திகளை பெரிய செய்தி நிறுவனங்களும் வெளியிடுகின்றன. அவர்கள் எங்களை அணுகி இதனை தெளிவுப்படுத்திக்கொள்ளமுடியும்தான். இது போன்ற நம்பகத்தன்மையற்ற செய்திகளை மக்களும் நம்ப ஆரம்பித்து விடுகின்றனர்” என்று விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்