- Advertisement -
Homeசினிமாவெற்றிமாறன் என்னைய நல்லா ஏமாத்திட்டாரு- விஜய் சேதுபதி ஓப்பன் டாக்! ஏன் தெரியுமா?

வெற்றிமாறன் என்னைய நல்லா ஏமாத்திட்டாரு- விஜய் சேதுபதி ஓப்பன் டாக்! ஏன் தெரியுமா?

- Advertisement-

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக அவரது திரைப்படங்களுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல உதவி இயக்குனர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவும் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன்.

இவர் முதன்முதலில் இயக்கிய “பொல்லாதவன்” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைந்து “ஆடுகளம்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் தேசிய விருதை பெற்றுத்தந்தது. அந்த சமயத்தில் இந்திய சினிமாவே வெற்றிமாறனை திரும்பி பார்த்தது. மேலும் தனுஷ்-வெற்றிமாறன் காம்போ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதன் பின் “விசாரணை”, “வட சென்னை”, “அசுரன்” ஆகிய வெற்றித்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது “விடுதலை” முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதுவரை காமெடியனாகவே பார்க்கப்பட்ட சூரி, இத்திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய “வட சென்னை” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் அத்திரைப்படத்தில் நடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் “விடுதலை” முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியபோது, “வெற்றிமாறன் என்னை ஏமாற்றிவிட்டார். 8 நாட்கள்தான் படப்பிடிப்பு என்று கூறி ஒப்புதல் வாங்கிவிட்டு படப்பிடிப்புக்கு சென்ற பின் 8 நாட்கள் வெறுமனே டெஸ்ட் ஷூட் மட்டுமே நடத்தினார். அதன் பிறகுதான் படப்பிடிப்பையே தொடங்கினார்” என கூறினாராம்.

- Advertisement-

எனினும் அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பேசியபோது, “வெற்றிமாறனுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் அறிவு சார்ந்ததாக இருந்தது” என மிகவும் பாராட்டினாராம்.

வெற்றிமாறன் தற்போது “விடுதலை” இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்