- Advertisement -
Homeசினிமா"விடுதலை" இரண்டாம் பாகத்தில் தனது மகனை ஹீரோவாக களமிறக்கும் விஜய் சேதுபதி? அப்போ சூரி?...

“விடுதலை” இரண்டாம் பாகத்தில் தனது மகனை ஹீரோவாக களமிறக்கும் விஜய் சேதுபதி? அப்போ சூரி?…

- Advertisement-

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. அதுவரை ரசிகர்களால் காமெடியனாக அறியப்பட்ட சூரி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார். ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டெபிளாக மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூரி.

“விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெகு காலம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. திண்டுக்கல், சிறுமலை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது. வெற்றிமாறனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுவும் போக வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்குவதால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிப்பு வந்தது. அதன்படி முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஜாதிய ஏற்றத்தாழ்வு, ஆதிக்க அதிகாரம் போன்ற போக்குகள் அனைத்தும் விமர்சிக்கும் வகையில் கதையம்சம் அமைவது வழக்கம். அந்த வகையில் “விடுதலை” திரைப்படத்தில் எளிய மக்களின் மீது போலீஸாரால் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை நம் கண்முன் கொண்டு வந்திருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சிறிது நேரம் வந்துபோனாலும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த நிலையில் “விடுதலை” இரண்டாம் பாகம் குறித்து ஒரு சூடான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement-

அதாவது “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியது உள்ளதாம். அந்த காட்சிகளை விரைவில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடிக்கவுள்ளாராம். சூர்யா சேதுபதி இதற்கு முன் “சிந்துபாத்”, “நானும் ரவுடிதான்” போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி தனது மகனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். அதன் தொடக்கமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

சற்று முன்