- Advertisement -
Homeசினிமாலியோ படத்தில் விஜய் சேதுபதி நிச்சயம் இருக்கிறார்? வெளியான தகவலால் உற்சாகமடைந்த ரசிகர்கள்!

லியோ படத்தில் விஜய் சேதுபதி நிச்சயம் இருக்கிறார்? வெளியான தகவலால் உற்சாகமடைந்த ரசிகர்கள்!

- Advertisement-

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

“லியோ” திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் அர்ஜூன் கலந்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இருவரும் பயங்கரமாக மோதிக்கொள்ளும்படி ஒரு சண்டை காட்சியை படக்குழுவினர் படமாக்கி வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் வசனகர்த்தாவான ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் சந்தனம் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் உடைந்த மூக்கு கண்ணாடியை கையில் வைத்திருந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும், “விக்ரம்” திரைப்படத்தின் தொடர்ச்சியாக சந்தனம் கதாப்பாத்திரம் “லியோ” திரைப்படத்தில் இடம்பெறவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன. மேலும் “லியோ” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல் வெளிவந்ததால் நிச்சயம் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

- Advertisement-

ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, “நான் லியோ படத்தில் நடிக்கவில்லை. தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள்” என கூறினார். இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படத்தில் விஜய் சேதுபதி இடம்பெறுகிறார் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “லியோ” படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் கதாப்பாத்திரத்திற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்