ஐ பி எல் டிக்கெட்டை 5000 ரூபாய்க்கு பிளாக்கில் விற்று மாட்டிக்கொண்ட விஜய் டிவி நாஞ்சில் விஜயன்… மறுபடியும் ஒரு சர்ச்சையா?

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு”, “அது இது எது” ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே புகழ் பெற்ற சின்னத்திரை காமெடியனாக திகழ்ந்தவர் நாஞ்சில் விஜயன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலும் திருமணம் செய்துகொண்டபோது நாஞ்சில் விஜயனும் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவியும் சேர்ந்து யூட்யூப் சேன்னலில் வனிதாவுக்கு எதிரான கருத்துகளை கூறிவந்தனர். இதனால் வனிதா, சூர்யா தேவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாது, நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றும் அந்த சமயத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயனுக்கும் சூர்யா தேவிக்கும் இடையே மோதல் நிலவியது. அதன் பின் சூர்யா தேவி ரவுடி கும்பலை அனுப்பி தன்னை தாக்கியதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாஞ்சில் விஜயன் புகார் அளித்தார்.

எனினும் நாஞ்சில் விஜயனின் மீது அதே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தன்னை ஆள் வைத்து மிரட்டி தாக்கியதாக ஏற்கனவே சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். அதன் பின் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தடயம் கூட அழிந்திடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

- Advertisement -

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பல சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்தாஜ் என்ற துணை நடிகையுடன் இணைந்து நாஞ்சில் விஜயன் ஐபிஎல் டிக்கெட்டை பிளாக்கில் விற்றுள்ளார். அதாவது ரூ.1500 மதிப்பிலான டிக்கெட்டை 5000 உயர்த்தி ரூ.6500க்கு விற்றுள்ளதாக அவர் மீது தற்போது புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே டிக் டாக் புகழ் சூர்யா தேவியுடனான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் தற்போது பிளாக் டிக்கெட் விற்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்