ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம்? தயாரிப்பாளரிடமிருந்த பறந்த ஃபோன் கால்? என்ன நடந்தது தெரியுமா!

- Advertisement -

தமிழ் சினிமாவின் தனித்துவ நடிகராக திகழ்ந்து வரும் விக்ரம், எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக கெட்டப்களில் நடித்த நடிகர் இவராகத்தான் இருப்பார்.

“பிதாமகன்”, “அந்நியன்”, “ஐ”, “கோப்ரா” போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இவ்வாறு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக திகழ்ந்து வருகிறார் விக்ரம். இந்த நிலையில் நடிகர் விக்ரமை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைப்பதற்காக அவரை லைகா நிறுவனத்தினர் அணுகியதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது.

- Advertisement -

“ஜெயிலர்”, “லால் சலாம்” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் முயர்சி செய்து வருகின்றனராம். அதன்படி ஒரு நாள் படக்குழுவினர் விக்ரமை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் விக்ரம் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்தாராம்.

விக்ரம் இவ்வாறு மறுப்பு தெரிவித்த விஷயம் லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரனின் காதுகளுக்கு  சென்றிருக்கிறது. உடனே அவர் விக்ரமிற்கு தொலைப்பேசியில் அழைத்து அவரை சம்மதிக்க முயன்றுள்ளார். கிட்டத்தட்ட 50 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறினாராம் சுபாஸ்கரன். இதனை தொடர்ந்து விக்ரம் தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம். எனினும் அவர் ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறிவருகின்றனர்

- Advertisement -

விக்ரம் இதற்கு முன் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறாரே தவிர மற்ற ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்ததில்லை. ஒரு வேளை விக்ரம், ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டால் தனது முழு வில்லத்தனத்திற்கான நடிப்பையும் வெளிகாட்டி பார்வையாளர்களை அசரவைத்துவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்