மக்களின் உள்ளம் கவர்ந்த சீரீயல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆவது ஒன்றும் புதிதல்ல. விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலகட்டத்தில் சக்கை போடு போட்ட “சரவணன் மீனாட்சி” தொடரில் ஜோடியாக நடித்த செந்திலும் ஸ்ரீஜாவும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்துகொண்டதை ரசிகர்கள் அறிவார்கள்.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “சிப்பிக்குள் முத்து” சீரியலில் ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த்-சம்யுக்தா ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு, அதாவது கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் திருமணமான 2 மாதங்களிலேயே பிரிந்தனர்.
இது குறித்து இருவரும் தனி தனியாக பல யூட்யூப் சேன்னல்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். இதில் சம்யுக்தா, “விஷ்ணுகாந்த் நல்லவர் என்று நினைத்தேன். ஆனால் திருமணம் ஆன பின்பு அவரது சுயரூபம் தெரிந்துவிட்டது” என்று கூறுகிறார். அதே போல் விஷ்ணுகாந்த், சம்யுக்தா அஃப்பேர் வைத்திருந்ததாக கூறுகிறார்.
இந்த நிலையில் சம்யுக்தா சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், “விஷ்ணுகாந்த் ஒவ்வொரு பேட்டியிலும் எனக்கு அஃபேர் இருந்ததாக கூறுகிறார். அதற்கு அர்த்தம் என்ன என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். அவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். ஆனாலும் அவர் நல்லவர் என்பதற்காக ஓகே சொன்னேன். ஆனால் பின்னாளில் அவரது உண்மையான சுயரூபம் தெரிய வந்தது.
அடிக்கடி உனக்கும் எனக்கும் செட் ஆவாது, பிரேக்கப் பண்ணிடு என கூறுவார். நான் அப்போதேல்லாம் அவரது காலில் விழுவேன். நான் செய்யாத தப்புக்கு நான்தான் சாரி கேட்பேன்.
நான் 25 வயதுக்குள் திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை நிலைக்காது என எனது ஜோசியர் என்றோ கூறினார். இதனை நான் விஷ்ணுகாந்திடம் கூறி, ‘கொஞ்சம் பொறுமையாக திருமணம் செய்துகொள்ளலாம்’ என கூறினேன். ஆனால் அவர் ஜோசியத்தின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை என கூறிவிட்டு என்னை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டார்” என அந்த வீடியோவில் சம்யுக்தா கூறியுள்ளார்.
View this post on Instagram