தங்கர் பச்சான் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பாரதிராஜா, அதிதி பாலன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன’. இத்திரைப்படத்தை தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் யோகி பாபு, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக தங்கர் பச்சான் திகழ்கிறார். ஒளிப்பதிவாளராக பல திரைப்படங்களில் பணியாற்றிய தங்கர் பச்சான், “அழகி”, “சொல்ல மறந்த கதை”, “தென்றல்”, “பள்ளிக்கூடம்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில்தான் தற்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட யோகி பாபு மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், “16 வயதினிலே திரைப்படத்தில் மீண்டும் நடிப்பதாக இருந்தால் எந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பீர்கள். சப்பாணியா? டாக்டரா? பரட்டையா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த யோகி பாபு, “டாக்டராக நடித்து மயிலு வாழ்க்கையை கெடுக்கமாட்டேன். பரட்டையாக நடிப்பேன்” என பதிலளித்தார். அப்போது அரங்கம் அதிரும் வகையில் ரசிகர்கள் கூச்சலிட்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “16 வயதினிலே” திரைப்படத்தில் பரட்டையாக ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Yogi Babu (@iYogiBabu) May 8, 2023
யோகி பாபு, தற்போது தமிழ் சினிமாவின் பிசியான காமெடி நடிகராக வலம் வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் சீரீயஸான கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். யோகி பாபு கதாநாயகனாக நடித்த “மண்டேலா” திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்திற்கு தேசிய விருதுகளும் கிடைத்தன. தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக்கானுடன் யோகி பாபு நடித்துள்ளார். இவர் ஏற்கனவே “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.