‘பாரதி ஏர்டெல் ஸ்காலர்ஷிப் திட்டம்’ முக்கியமாக ஏழை மாணவ மாணவிகளை மையமாகக் கொண்டது. இந்த ஆண்டு 250 மாணவர்களுடன் தொடங்கும் உதவித்தொகை, ஆகஸ்ட் 2024 இல் சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களுக்குப் பொருந்தும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.வேறு உதவித்தொகை, மானியங்களைப் பெறுபவர்களாக இருக்கக்கூடாது.
இந்த உதவித்தொகையைப் பெறுபவர்கள் ‘பாரதி அறிஞர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் படிப்புக் காலம் முழுவதும் கல்லூரிக் கட்டணத்தில் 100 சதவீதத்தைப் பெறுவதோடு மடிக்கணினியும் வழங்கப்படும். கூடுதலாக, அதற்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் வழங்கப்படும்.
பார்தி ஏர்டெல் ஸ்காலர்ஷிப்கள் என்.ஐ.ஆர்.எஃப் (பொறியியல்) தரவரிசையில் முதல் 50 இடங்களில் உள்ள கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (AI, IoT, AR/VR, Machine Learning, Robotics) ஆகிய துறைகளில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த நிதி உதவியைப் பெற தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமுள்ள மாணவர்கள் https://bhartifoundation.org/bharti-airtel-scholarship/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மின்னஞ்சல்/ மொபைல் எண் பயன்படுத்தி பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, விவரங்களை நிரப்பி ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளச் சான்று, நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான கடிதம், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வருமான வரிச் சான்றிதழ், கல்லூரி கல்வி மற்றும் விடுதி கட்டண விவரங்கள், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள், கல்லூரியின் வங்கி கணக்கு விவரங்கள், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.