Homeஇந்தியாதிருமணத்தில் ஆனந்த் அம்பானி கட்டி இருந்தால் வாட்ச் விலை என்ன தெரியுமா?

திருமணத்தில் ஆனந்த் அம்பானி கட்டி இருந்தால் வாட்ச் விலை என்ன தெரியுமா?

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள், 3 நாட்கள் உலகமே வியக்கும் வகையில் குஜராத் ஜாம்நகரில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை பற்றி உலகமே வியந்து பேசியது.

இந்த 3 நாள் விழாவுக்காக ஒட்டுமொத்த ஜாம்நகரும் ஸ்மார்ட்சிட்டியாக மாறியது. ஒருபக்கம் ஆடம்பரம், பிரமிப்பு என வியக்கவைக்க, மறுபுறம் அம்பானி குடும்பம் கண்ணீர், பாசம் கரைபுரண்டு ஓடியது.

இந்த விழாவில் பல வீடியோ டிரெண்டான நிலையில் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த வாட்ச்-ஐ வியந்து பேசிய வீடியோ செம டிரெண்டானது. ஆனந்த் அம்பானி கட்டியிருந்தது Richard Mille வாட்ச், முழுமையான sapphire கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் இந்த RM 56-02 கைக்கடிகாரம், 5ம் தர டைட்டானியத்தால் செய்யப்பட்ட அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. 0.35 மிமீ தடிமன் கொண்ட ஒரே ஒரு கயிற்றால் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த கைக்கடிகாரம், நவீன வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

இது நேரத்தை துல்லியமாகக் காண்பிப்பதற்காக, புவி ஈர்ப்பு விசையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் “டூரில்லியன் இஸ்கேப்மெண்ட்” (tourbillon escapement) என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. ரிச்சர்ட் மில்லேவின் RM 56-02 வாட்ச், உயர்தர கைக்கடிகாரத் தயாரிப்பு (haute horology) மற்றும் நவீன அழகியல் ஆகியவற்றின் கலவையாகும்.

இந்த வாட்சின் தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேன்மை ஆகியவை அதன் மிக அதிகமான விலைக்குக் காரணமாக இருக்கிறது. இதன் விலை 2.2 மில்லியன் டாலர் அதாவது ரூ. 18.2 கோடி (வரி இல்லாமல்). இதுவரை கைக்கடிகாரங்களில் ஆர்வம் காட்டாத மார்க் ஜுக்கர்பெர்க் கூட, “இதைப் பார்த்த பின்னர், நானும் கைக்கடிகாரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் உலகளவில் 6 எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது. இதில் ஒன்றை தான் ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார் மேலும் ரிச்சர்ட் மிலே RM என்கிற வாட்ச் சர்வதேச அளவில் 30 மட்டுமே உள்ளன. இதன் விலை ரூ.12.5 கோடி. அதில் ஒன்றையும் ஆனந்த் அம்பானி வைத்துள்ளார்.

சற்று முன்