Homeஇந்தியாஆப்பிள் 16 மாடல் போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு.

ஆப்பிள் 16 மாடல் போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு.

ஆப்பிள் நிறுவனம், சீனாவில் தன் போன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தது. சில ஆண்டுக்கு முன் இந்தியாவிலும் உற்பத்தியைத் தொடங்கியது. இந்தியாவில் போன் உற்பத்தி செய்வது, ஆப்பிள் நிறுவனத்துக்கு விற்பனை உள்ளிட்ட பல வகையிலும் வசதியாக உள்ளது. இதனால் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் 16 மாடல் உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்
@ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சில ஆண்டுகளாகக் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதற்கு, சீனாவில் உற்பத்தியைக் குறைக்கும் ஆப்பிளின் புதிய திட்டம் தான் காரணம். அமெரிக்கா, சீனா இடையிலான அரசியல் உறவுகள் மோசமாக இருப்பதால் தான் இத்தகைய நிலை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தொழில் துறையினர் கருதுகின்றனர்.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Canalys தரவுப்படி, ஆப்பிள் இந்தியாவில் 2022ல் 1.5 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்தது. இது, கடந்த ஆண்டு 2.5 கோடியாக உயர்ந்துள்ளது தெரியவந்தது. 2024ம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் சீனாவில் ஐபோன் விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஐபோன் 17 மாடல் பிரத்யேக உற்பத்திக்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன்