Homeஇந்தியாஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து காவலில் இருக்க உத்தரவு.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து காவலில் இருக்க உத்தரவு.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

சற்று முன்