Homeஇந்தியாபீகாரில் புதுசாக கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

பீகாரில் புதுசாக கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

பீகார் மாநிலம் பக்ரா நதிக்கு குறுக்கே பத்கியா காட் எனும் பகுதியில் ரூ.12 கோடியில் மேம்பாலம் என்பது புதிதாக கட்டப்பட்டு வந்தது.

இந்த மேம்பால பணிகள் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்காக மேம்பாலம் காத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்று திடீரென்று இந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது.இன்று பாலப்பணிகள் நடைபெற்று வரும்போதே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தான தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனர் என்பது குறித்தான மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறப்பு விழாவுக்கு முன்பே பல கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலம் எப்படி இடிந்து விழுந்தது எனவும் தரமின்மையால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்