மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியானது 40 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட்ட பொருள்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.