Homeஇந்தியாடெல்லி விமானத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு, பெண் டாக்டரின் மூலம் சிகிச்சை பெறப்பட்டது.

டெல்லி விமானத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு, பெண் டாக்டரின் மூலம் சிகிச்சை பெறப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தின் ஃபுட் கோர்ட் பகுதியில் 60 வயதுக்கு மேல் நிரம்பிய முதியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கியுள்ளார். இந்த வேளையில் அங்கு வந்த பெண் டாக்டர் ஒருவர் யோசிக்காமல் அவருக்கு சிபிஆர் உயிர்காக்கும் முறையை அளிக்க தொடங்கினர்.

அதன்படி மாரடைப்பால் மயங்கிய முதியவரின் மார்பு பகுதியில் இரண்டு கைகளை வைத்து அழுத்தம் கொடுத்தார். அதன்பிறகு அவரின் கையை பிடித்து பல்ஸ் பார்த்து சிறிது சிறிதாக இடைவெளி விட்டு மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்தார்.

பெண் மருத்துவர் அளித்த முதலுதவியால் முதியவர் சிறிது நேரத்தில் கண் விழித்தார். இதனைத் தொடர்ந்து முதியவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே மாரடைப்பால் உயிருக்கு போராடிய முதியவருக்கு சரியான நேரத்தில் விரைந்து செயல்பட்டு முதலுதவி அளித்த பெண் மருத்துவரை சூழ்ந்திருந்த பலரும் வெகுவாக பாராட்டினர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும் பெண் மருத்துவரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்