Homeஇந்தியாடெல்லியில் பட்டாசு வெடிக்க தடை

டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் பயன்படுத்த டெல்லி அரசு தடை விதித்ததுள்ளது.

பட்டாசுகளை தயாரித்தல், சேமித்தல், விற்பனை செய்தல், ஆன்லைன் டெலிவரி செய்தல், வெடிக்க செய்தல் ஆகியவை டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசுகள் உட்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் இந்த தடை பொருந்தும்.
“கடுமையான” காற்று மாசுபாடு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியை(NCR) சூழ்ந்துள்ளதால், பட்டாசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டாம் என்று காவல்துறைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை இந்த தடை உத்தரவைக் பின்பற்றி தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்