Homeஇந்தியாமின்னணு வாக்குப்பகுதிவு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது! ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக எலான் மஸ்க்...

மின்னணு வாக்குப்பகுதிவு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது! ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக எலான் மஸ்க் பேட்டி.

அமெரிக்க தேர்தலில் ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்யும் ஆபத்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும், அதில் AI அல்லது மனிதர்களால் எளிதில் ஹேக் செய்யக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது, வாக்குச்சீட்டு வாக்குப்பதிவு முறைக்கு திரும்ப வேண்டும் என டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஒன்றிய முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை.” எனக் கூறியிருந்தார். அவருக்கு மீண்டும் ட்விட்டரில் பதிலளித்துள்ள எலான் மஸ்க், “எதையும் ஹேக் செய்யலாம்” என ராஜீவ் சந்திரசேகருக்கு, எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

எலான் மஸ்க் கருத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் பொறுப்பபில்லாமல் செயல்படும் போது ஜனநாயகம் மோசடிக்கு ஆளாகிறது” எனக் கூறியிருந்தார்.

சற்று முன்