Homeஇந்தியாமக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

18வது மக்களவையின் முதல் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் பர்த்ஹருளி மஹ்தாப் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, இன்றும் திமுக மக்களவை உறுப்பினர்கள் உள்பட பலருக்கும் மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ஹருளி மஹ்தாப்-க்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான முடிவு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “என் அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் புதிய தோற்றத்தை இந்தியா வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் (மக்களவை) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்