- Advertisement -
இந்தியா

நீங்க அடிக்கடி கூகுள் மேப் பாப்பிங்களா? இந்த புதிய தகவல் உங்களுக்காக.

நாம் எங்கு செல்லவேண்டுமோ, அந்த இலக்குக்கான வழியை விரைவாகவும், எளிதாகவும் தெரிந்து கொள்ள உதவும் ஆப் கூகுள் மேப்

அதன்படி, கூகுள் மேப்பில், நாம் எந்த இடத்தில் உள்ளோமோ, அந்த லொகேஷனை, நீலநிற புள்ளியில் காட்டும்.. ஒருவேளை நம் இருப்பிடத்தை கூகுள் மேப்பால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அந்த புளூ கலர் புள்ளியை சுற்றிலும், வெளீர் நீலநிறத்தில் வட்டமாக தோன்றும்.. இந்த வெளீர் நீல நிற வட்டத்திற்குள், எங்குவேண்டுமானாலும் நம்முடைய லொகேஷன் இருக்கலாம் என்று அர்த்தம்.

அதேசமயம், இந்த மேப்பில் நீல நிற புள்ளி அல்லது சாம்பல் நிறத்தில் இருந்தால், நம்முடைய இருப்பிடத்தை கூகுளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.. அதாவது பழைய லொகேஷனையே மேப் காட்டிக் கொண்டிருப்பதாக அர்த்தம்.. அதேபோல, செல்போனில் சிக்னல் இல்லாத சமயங்களிலும் இப்படி லொகேஷனை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது.

இந்த கூகுள் மேப் மூலம், நாம் செல்லும் வழியிலுள்ள டோல்கேட்களின் விவரங்களையும், அதன் கட்டணங்களையும்கூட அறிய முடியும்.. வழியிலுள்ள சுங்க சாவடிகளின் மொத்த கட்டண விவரத்தை அறிய வேண்டுமானால், Settings என்ற ஆப்பிற்கு சென்று Show Toll Price என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அதேபோல, கூகுள் மேப்களில், கார்கள், பைக்குகள், நடைப்பயிற்சிக்கான ஓட்டுநர் திசைகளையும் அறிந்து கொள்வதுடன், மெட்ரோ, சுரங்கப்பாதை, உள்ளிட்ட மற்ற பொதுப்போக்குவரத்துக்கான வழியையும் கண்டுபிடிக்க முடியும்.. இதற்கு லொகேஷனை தேடி, Details என்ற பக்கத்தை விரிவுபடுத்தி, “Public transport nearby” என்ற பகுதியை செலக்ட் செய்து பார்க்கலாம்.அதேபோல, நீங்கள் செல்ல வேண்டிய சாலையில் உள்ள ட்ராஃபிக் நிலைமைகளையும் முன்கூட்டியே கூகுள் மேப் நமக்கு காட்டி தந்துவிடும்.. இதனால் நமக்கு நேரமும் மிச்சப்படுத்தப்படும்.

சிலசமயம், நம்முடைய வாகனத்தை அவசரத்தில் பார்க் செய்துவிட்டு, பிறகு எங்கு வண்டியை பார்க்கிங் செய்துள்ளோம் என்பதை மறந்துவிடுவோம்.. இதையும் கூகுள் மேப்கள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம்.. இதற்கு பார்க்கிங்கைக் காட்டும் நீல நிற ஐகானுக்குள் நுழைந்து, Pop up Medu-விலிருந்து பார்க்கிங்கை சேமிக்க வேண்டும். இப்போது, நாம் செல்ல வேண்டிய அல்லது செல்வதற்கு திட்டமிடும் இடத்திற்கான பார்க்கிங் நிலையை கூகுள் மேப் நமக்கு காண்பிக்கும், இதற்கு லொகேஷனை தேடி டீட்டெயில்ஸ் பக்கத்தை விரிவுபடுத்தி ‘P’ ஐகானை தேர்வு செய்து பார்க்கலாம். அதேபோல, கூகுள் மேப் ஹிஸ்டரியை அழிக்க வேண்டுமானால், ஐபோன் வைத்திருப்பவர்கள், கூகுள் மேப்ஸ் செட்டிங்ஸ்-ல் Map History-யை தேர்வு செய்து, அதற்கு மேலிருக்கும் “Search” என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தேதி வாரியாகவும் பயண விவரங்களை டெலிட் செய்து கொள்ளலாம்.

- Advertisement -
Published by

Recent Posts