Homeஇந்தியாஇன்று குஜராத்தில் விமான நிலையம் இடிந்து விழுந்தது.

இன்று குஜராத்தில் விமான நிலையம் இடிந்து விழுந்தது.

டெல்லியில் பெய்த மழை காரணமாக விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் மேற்கூரை இடிந்த விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பயணிகளுக்காக காத்திருந்த கால் டாக்சி கார்கள் அப்படியே அப்பளம் போல நொறுங்கின. காருக்குள் இருந்த ஓட்டுநர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் விபத்துக்குள்ளான டெர்மினல் 1 பகுதியை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்திருக்கிறது. விபத்து நடந்த பகுதி கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டது என்று பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் இதே போல் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. ராஜ்கோட் பகுதியில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. பயணிகளை கால் டாக்சிகள் இறக்கி, ஏற்றும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன் வந்த தகவலின்படி பிரதமர் மோடியால் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்ட லக்னோ விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் கொட்டும் மழைநீர் வீடியோ வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சற்று முன்