Homeஇந்தியாஇந்தியாவில் முதல் பத்து வரிசையில் இருக்கும் பணக்காரர்கள் யார் யார் தெரியுமா.

இந்தியாவில் முதல் பத்து வரிசையில் இருக்கும் பணக்காரர்கள் யார் யார் தெரியுமா.

ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாகி வருவதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும், கூடுதலாக 220 பேர் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 1,334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதில், 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ரியல் எஸ்டேட், தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் துறைகளின் வளர்ச்சியாகும்.

இந்த நிலையில், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி தொழிலதிபரான அம்பானியை பின்னுக்குத் தள்ளி, தொழிலதிபர் அதானி முதலிடம் பிடித்துள்ளார். 3வது இடத்தில் எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உள்ளார்.

1.கவுதம் அதானி – 11.61 லட்சம் கோடி2.முகேஷ் அம்பானி – 10.14 லட்சம் கோடி3.ஷிவ் நாடார் -3.14 லட்சம் கோடி4.சைரஸ் பூனாவாலா – 2.89 லட்சம் கோடி5.திலிப் சங்வி – 2.49 லட்சம் கோடி6.குமார்மங்கலம் பிர்லா – 2.35 லட்சம் கோடி7.கோபிசந்த் ஹிந்துஜா – 1.92 லட்சம் கோடி8.ராதாகிஷன் தமானி – 1.90 லட்சம் கோடி9.அஸீம் பிரேம்ஜி – 1.90 லட்சம் கோடி10.நீரஜ் பஜாஜ் – 1.62 லட்சம் கோடி

சற்று முன்