Homeஇந்தியாஇந்தியாவில்தான் கைபேசி கட்டணம் குறைவாக உள்ளது. ஒரு அறிக்கையில் மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில்தான் கைபேசி கட்டணம் குறைவாக உள்ளது. ஒரு அறிக்கையில் மத்திய அரசு விளக்கம்

மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (டிராய்) கட்டுப்பாட்டின்கீழ், கைப்பேசி சேவைகளுக்கான வாடிக்கையாளா் கட்டணத்தை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப்பின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைப்பேசி சேவை கட்டணங்களை உயர்த்தியிருப்பதாகவும், உலக அளவில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கைப்பேசி சேவைகளுக்கான கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கைப்பேசி சேவைகளுக்கான வாடிக்கையாளா் கட்டணத்தை ஒப்பிட்டு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பாதுகாப்பதுடன், 5ஜி, 6ஜி, தொழில்துறைக்கான ஐஓடி/எம்2எம் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீகள் செய்வதற்கும் நிதியாதார தேவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசின் மேம்பட்ட கொள்கைகளால் கைப்பேசி சேவைக்கட்டணம் பரவலாகக் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஜியோ, ஏா்டெல், வோடாஃபோன் ஆகிய நிறுவனங்கள் தன்னிச்சையாக கைப்பேசி சேவைக் கட்டணங்களை உயா்த்திக்கொள்ள மத்திய அரசு எவ்வாறு அனுமதி வழங்கியது என நாட்டிலுள்ள 109 கோடி கைப்பேசி பயனாளா்களுக்கும் பிரதமா் மோடி பதில்கூற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்