பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் ரதத்தை வடம்பிடித்து இழுத்தனர்.அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். ஜெகநாதர் ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பூரியில் தலத்வாஜ தேர் பகுதியில் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பூரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆண் பக்தர் மட்டும் மூச்சுத் திணறல் அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விஷேஷமான பூரி ஜெகனாநாதர் ஆலய விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.