Homeஇந்தியாஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷாவை கடுமையாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்.

ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷாவை கடுமையாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்.

பிரதமர் மோடி குறித்தும் அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். மேலும் கர்நாடக பாஜக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அனைவரையும் சமூக வலைதளங்கள் வாயிலாக விளாசி வருகிறார்.

இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை கடுமையாக விமர்சனம் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ஐ.சி.சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக.. ஒரு பேட்ஸ்மேன்.. பவுலர்.. விக்கெட் கீப்பர்.. ஃபீல்டர்.. மற்றும் ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரர்.. இந்தியாவே உருவாக்கிய மிகச்சிறந்த லெஜண்டிற்கு அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளிப்போம்.. என தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், நிர்வாகத்தை நடத்துவதற்கு கிரிக்கெட் திறமை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் ராகுல் காந்தியின் மூளையின் லெவலுக்கு, ஜெய் ஷாவுக்கு முன், ஜக்மோகன் டால்மியா , ஷரத் பவார் , என் ஸ்ரீனிவாசன் , ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ICC க்கு தலைமை தாங்கினார்கள் … அவர்கள் எத்தனை மேட்ச் விளையாடினார்கள் என்று கூகுள் செய்து பாருங்கள் என்றும் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் சிலர், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள், உங்களுக்கு அரசியலும் தெரியாது கிரிக்கெட்டும் தெரியாது என்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ தலைவராக இருந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்