Homeஇந்தியாபிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா மும்பைக்கு வருகை.

பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா மும்பைக்கு வருகை.

2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா தன்னுடைய தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார். அவருடைய என்ட்ரி இசை பலருடைய ரிங்டோனாக இருந்தது. மேலும் WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார்.16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய ஓய்வை அறிவித்து மக்களை சோகத்தில் ஆழ்த்தினார்.47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர். 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெசில்மேனியா 41-ல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார். இதன்படி 2025-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார்

இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணத்திற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமண விழா ஜூலை 12-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இந்தியா தொடங்கி பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த, ஏராளமான துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். தொழில் அதிபர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தவிர, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்கான விருந்தினர் பட்டியலில் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், மைக் டைசன், ஜான் சீனா, டேவிட் பெக்காம் மற்றும் அடீல் ஆகியோர் அடங்குவர்.

இதனையடுத்து ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்காக மும்பை வந்துள்ளார் WWE புகழ் ஜான் சீனா

சற்று முன்