Homeஇந்தியாமாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி. கல்வி கடனுக்கான வட்டி ரத்து.

மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி. கல்வி கடனுக்கான வட்டி ரத்து.

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான வட்டி ரத்துபெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை முன்னிறுத்தி நமது கொள்கைகள் அமைந்துள்ளன – நிதியமைச்சர்

இலவச உணவு தானிய திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது
நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளன
நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 4%ஆக சரிவடையும்

கல்வி, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்

பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்யத் திட்டம்

நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்
நாட்டில் உள்ள வேளாண்துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு: நிர்மலா சீதாராமன்
இளைஞர்கள் நலனிற்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது

அடக்க விலையை காட்டிலும் 20% லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது

விவசாயத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இனைந்து நடவடிக்கை
பருவ நிலையை தாக்குபிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது

4.1 கோடி இளைஞர்களின் முன்னேற்றதுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 3 திட்டங்கள் அறிமுகம்

முதல் திட்டத்தின்படி முதன்முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்

20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் 1,000 பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்
வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்

பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்

நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும்
புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.15000 முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

20 லட்சம் இளைஞர்களுக்கு வழங்க புதிய திட்டம் உருவாக்கப்படும்.
பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும்.

பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பீகாரில் பாலங்கள், சாலைகள் சமைக்க ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆந்திராவில் தலைநகர் நிதி சார்ந்து ரூ.5000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள்

விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

சற்று முன்