Homeஇந்தியாராகுல் காந்தியைப் பற்றி கங்கனா ரணவத் பேட்டி.

ராகுல் காந்தியைப் பற்றி கங்கனா ரணவத் பேட்டி.

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர் என்று நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது.

நமது பங்குச் சந்தையைக் குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது. இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.

நீங்கள் (ராகுல் காந்தி) வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்