நிபா வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது கேரள மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களுக்கு பிபி கிட் உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நிபா வைரஸ் பாதிப்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் 2018, 2019, 2021 மற்றும் 2023 என நான்கு முறை நிபா வைரஸ் கேரளாவில் உறுதி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது.
நிபா வைரஸ் தொற்று அடிப்படையில் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரகிறது. வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவது இல்லை. படிப்படியாக காய்ச்சல், வாந்தி, தொண்டை வலி, தொண்டைப் புண், தலை வலி, உடல் வலி ஆகியவை ஏற்படுகின்றன.
நிபா வைரஸ் தீவிரம் அடைந்த சிலருக்கு நிமோனியா, கடும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் இன்னும் சிலருக்கு வலிப்பு, மூளைக்காய்ச்சல் ஆகியவையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களுக்கு அது எளிதில் பரவுகிறது.தொற்று ஏற்படும்.
நிபா வைரஸ் தொற்று பாதித்த 4 முதல் 14 நாட்கள் உடலில் தீவிரமாக இருக்கும். எனினும், முழுமையாக உடலில் இருந்து அழிய45 நாட்கள் வரை கூட ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிபா வைரஸை கண்டறிய எலிசா மற்றும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.