Homeஇந்தியாமதுபான விலை குறைப்பு! பெட்ரோல் டீசல் விலை உயர்வு.

மதுபான விலை குறைப்பு! பெட்ரோல் டீசல் விலை உயர்வு.

முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என வேதனையில் ஆழ்ந்தனர். இந்த சூழலில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பிரீமியம் வகை மதுபானங்கள் மீதான கலால் வரியை குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது காஸ்ட்லி வகை மதுபானங்களை விரும்பி அருந்துவோருக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக மாறியிருக்கிறது.

அத்தியாவசியமான பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விட்டு, பணக்காரர்கள் அருந்தும் மதுபானத்திற்கு விலையை குறைப்பதா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் சாமானிய மக்கள்.

சற்று முன்